< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பு: வெற்றிகரமாக அகற்றிய கால்நடை மருத்துவர்கள்
|26 May 2022 10:26 PM IST
அமெரிக்காவில் நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பை கால்நடை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் நான்கு வயது நிரம்பிய நாய் ஒன்று கழுத்தில் அம்பு எய்த நிலையில் காணப்பட்டது. நாய்க்குட்டி வலியால் அலறுவதைக் கேட்ட பெண் ஒருவர் விலங்கு சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
நாயை பரிசோதனை செய்த அவர்கள், உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு நாயை பரிசோதித்த மருத்துவர்கள், நாயின் தமனிகளில் அம்பு தாக்கவில்லை என்றும், அம்பினால் நாய்க்கு பெரிய பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்தனர்.
நாயை மயக்கமடைய செய்த மருத்துவர்கள், வெற்றிகரமாக நாயின் கழுத்தில் இருந்த அம்பை அகற்றினர். தற்போது நாய் நலமுடனும், சுறுசுறுப்பாகவும் உள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், நாயின் மீது யாரோ வேண்டுமென்றே அம்பு எய்தது போல் தெரிகிறது என்றும், இது மிகவும் மோசமான செயல் என்றும் தெரிவித்தார்.