< Back
உலக செய்திகள்
கலிபோர்னியாவில்  கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ: அவசர நிலை பிரகடனம்
உலக செய்திகள்

கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ: அவசர நிலை பிரகடனம்

தினத்தந்தி
|
25 July 2022 9:04 PM IST

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத் தீயை அணைப்பதற்குத் தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர்.

கலிபோர்னியா,

மரிபோசா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (22ஜூலை) பிற்பகல் காட்டுத் தீ பரவத் தொடங்கியது.

தீ பரவியவுடன் அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதிவேகமாகப் பரவும் தீயைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்துவருகின்றனர்.

இருப்பினும் 6 மணிநேரத்துக்குள் சுமார் 16 சதுர கிலோமீட்டர் தூரத்துக்குத் தீ பரவி அருகிலுள்ள சியரா தேசிய வனப்பகுதியைப் பதம் பார்த்தது. அப்பகுதியில் உள்ள ஒரு கட்டிடம் தீயில் முழுமையாக எரிந்ததாக உள்ளூர்ச் செய்தி நிறுவனம் கூறியது.

சியரா வனப்பகுதிக்கு அருகிலுள்ள நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ பரவி ஆங்காங்கே வெடிப்புகளை ஏற்படுத்துவதால் தீயைக் கட்டுப்படுத்தச் சிரமமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரைவில் தீயைக் கட்டுப்படுத்தாவிட்டால் சியரா தேசிய வனப்பகுதி முழுவதும் அழியக்கூடும் என்று அதிகாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

காட்டுத்தீயால் 12 ஆயிரம் ஏக்கர் காடுகள் இதுவரை அழிந்திருப்பதாகவும், 6 ஆயிரம் பேர் குடியிருப்புகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தொவித்துள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில் கலிபோர்னியாவின் பெரும்பாலான பகுதிகள் புகை மண்டலத்தால் மூடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்