< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் போலி ஆவணங்கள் மூலம் விசாவுக்கு விண்ணப்பித்த டெல்லி வாலிபர் கைது
உலக செய்திகள்

அமெரிக்காவில் போலி ஆவணங்கள் மூலம் விசாவுக்கு விண்ணப்பித்த டெல்லி வாலிபர் கைது

தினத்தந்தி
|
15 Dec 2022 7:14 AM IST

அமெரிக்காவில் தனது இரட்டை சகோதரன் இறந்ததாக கூறி போலி ஆவணங்கள் மூலம் விசாவுக்கு விண்ணப்பித்த வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.

புதுடெல்லி,

டெல்லியை சேர்ந்தவர் ஜஸ்விந்தர் சிங் (வயது 26). இவர் அமெரிக்க சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டார். எந்த வழியிலாவது அமெரிக்கவாசியாகிவிட வேண்டும் என்று வஞ்சகமாக திட்டமிட்டாா்.

இந்நிலையில் அமெரிக்காவில் தன்னுடன் பிறந்த இரட்டை சகோதரன் இறந்துவிட்டதாக கூறி, இறுதிச்சடங்கிற்கு செல்ல வேண்டும் என கூறி விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். இதற்காக போலியான ஆவணங்களை தயார் செய்திருந்தார். ஆனால் அவர் போலி ஆவணங்களை கொண்டு விசாவுக்கு விண்ணப்பித்ததை அமெரிக்க தூதரக அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டனர்.

ஜஸ்விந்தர் சிங்கை பிடித்து டெல்லி போலீசாாிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜஸ்விந்தர் சிங்கை கைது செய்தனர். போலி ஆவணங்கள் தயாரிக்க அமெரிக்காவில் இருந்து உதவியவரையும் போலீசார் வழக்கில் சேர்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்