< Back
உலக செய்திகள்
இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

Image Courtesy: AFP 

உலக செய்திகள்

இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

தினத்தந்தி
|
8 July 2022 5:01 AM IST

இத்தாலி நாட்டின் ஆல்பஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

ரோம்,

ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்று ஆல்ப்ஸ் மலைத்தொடராகும். இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது. சுற்றுலாதளமான இந்த மலைத்தொடரில் மலையேறுதல், பனிச்சறுக்கு உள்ளிட்ட சாகசங்களில் பலர் ஈடுபடுவார்கள்.

இத்தாலி நாட்டில் வழியாக செல்லும் இந்த மலைத்தொடரில், சுமார் 3300 மீட்டர் உயரத்தில் மர்மலாடா என்ற சிகரம் உள்ளது. புன்டா ரோக்கா எனற பகுதி வழியாக இந்த சிகரத்தை அடையலாம். இந்த பகுதியில் பலர் மலையேற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், புன்டா ரோக்கா பகுதிக்கு அருகில் பனிப்பாறை சரிந்து விழுந்தது. மலையேற்றத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் சிலர் அதில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர்.

இந்த பனிச்சரிவில் 13 பேர் மாயமாகியுள்ளனர். மாயமனவர்களை மீட்கும் பணிகளில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது என்று இத்தாலியின் டிரெண்டினோ சிறப்பு தன்னாட்சி அமைப்பின் தலைவர் மொரிசியோ புகாட்டி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்