< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சீனாவில் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
|21 July 2024 9:42 PM IST
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பீஜிங்,
சீனாவின் ஷாங்கி மாகாணத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள ஜின்கியான் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. பரபரப்பான அந்த பாலத்தின் மீது அப்போது 25-க்கும் மேற்பட்ட கார்கள், லாரிகள் சென்று கொண்டிருந்தன. இதனால் அந்த வாகனங்களும் ஆற்றின் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதால் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று மேலும் 8 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். இதன்மூலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.