< Back
உலக செய்திகள்
லிபியா: கிளர்ச்சியாளர்களின் இரு தரப்பு இடையே மோதல் - 13 பேர் பலி

Image Courtesy: AFP

உலக செய்திகள்

லிபியா: கிளர்ச்சியாளர்களின் இரு தரப்பு இடையே மோதல் - 13 பேர் பலி

தினத்தந்தி
|
28 Aug 2022 2:44 AM GMT

லிபியாவில் கிளர்ச்சிப்படையில் இரு தரப்புக்கு இடையேயான மோதலில் 13 பேர் உயிரிழந்தனர்.

திரிபோலி,

வட ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இங்கு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளுக்கும் கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சி படையினருக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, லிபியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களுக்கு இடையே அவ்வப்போது மோதல் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், ஹைதம் தஜோரியின் திரிபோலி விடுதலை பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும் அப்தில் கானி அல் கில்கி தலைமையிலான கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தலைநகர் திரிபோலியில் நேற்று திடீரென மோதல் வெடித்தது.

இந்த மோதலின் போது துப்பாக்கிச்சூடு, வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. கிளர்ச்சியாளர்களின் இரு தரப்புக்கு இடையே நடந்த இந்த மோதலில் 13 பேர் உயிரிழந்தனர். 95 பேர் படுகாயமடைந்தனர்.

பல்வேறு கட்டிடங்கள், வாகனங்களுக்கு கிளர்ச்சியாளர்கள் தீவைத்து கொளுத்தியதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்