பாகிஸ்தான் பெண் மந்திரியை திணறவைத்த ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
|பாகிஸ்தானின் மந்திரி ஹினா ரப்பானி கர் மற்றும் இந்திய ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரிடையே கலந்துரையாடல் நடைபெற்றது.
டாவோஸ்
உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்று வருகிறது. கொசோவோ, கொலம்பியா, லெபனான், ஈராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் 40 தசாப்தங்களாக மோதலை தீர்க்கவும் மற்றும் பேச்சுவார்த்தையை நடத்தும் வகையிலும் 53வது உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர சந்திப்பின் கருப்பொருள், 'ஒரு துண்டு துண்டான உலகில் ஒத்துழைப்பு' என்பதாகும்.
இந்த மாநாட்டில் 130 நாடுகளைச் சேர்ந்த 2700 தலைவர்களும், இந்தியாவில் இருந்து 100 உயரதிகாரிகள் உட்பட தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
புவிசார் அரசியல் மோதல்கள், உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகள் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய அக்கறையுள்ள விஷயங்களைப் பற்றி விவாதிக்க தலைவர்கள் கூடி உள்ளனர்.
இந்த கூட்டத்தில் 2011 முதல் 2013 வரை பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த ஹினா ரப்பானி கர் மற்றும் இந்திய ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரிடையே கலந்துரையாடல் நடைபெற்றது.
விவாதத்தை ஆரம்பித்து வைத்து பேசிய ஹினா ரப்பானி பிரச்சினையை தீர்க்க தேவையான அரசியல் திறன் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது, ஆனால் இப்போது இல்லை என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
அரசியல் திறமை இல்லாதது, அந்த பக்கத்திலிருந்து இருப்பதை நான் காண்கிறேன்," ஏன் மற்ற அனைத்து அண்டை நாடுகளுடனும் இந்தியாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வங்காள தேசம், நேபாளம் மற்றும் இலங்கையுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து, பாகிஸ்தானின் வளர்ச்சியில் இந்தியா பெரும் பங்காக இருக்க தயாராக உள்ளது.
ஹினா ரப்பானி பால்காட் தாக்குதல் பற்றி குறிப்பிட்டு, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
பயங்கரவாதம் எங்கு தோன்றியது என்பது உலகுக்கே தெரியும். ஒசாமா பின்லேடன் எங்கே இருந்தார்? உலகில் பிரச்சனைகளை ஏற்படுத்திய மற்ற பயங்கரவாதிகள் எங்கே இருந்தனர்? என கேட்டார்
மேலும் நீங்கள் கைகுலுக்க விரும்பினால், சில நாடுகளில் பயங்கரவாதிகள் ஊக்குவிக்கப்படுவதில்லை என்பதையும் நீங்கள் பார்க்க வேண்டும்.
2014 ஆம் ஆண்டு, பிரதமர் மோடி தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தானில் இருந்து முன்னாள் பிரதமர் ஷெரீப்பை அழைத்தார். "பிரதமர் மோடி (உறவுகளை மேம்படுத்த) விருப்பம் காட்டியுள்ளார் என்று அவர் கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்காக இந்தியாவை தாக்கிய ஹினா ரப்பானி பிரதமர் மோடி இந்தியாவின் "மதச்சார்பற்ற இமேஜை" கெடுத்துவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
"நிச்சயமாக இல்லை" . இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் முத்தலாக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்தியாவில் சிறுபான்மையினருக்கான பல மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளன, நன்மைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன.
தாக்குதலை முடுக்கிவிட்டு, சிறுபான்மையினர் பெரும் பிரச்சனையில் இருக்கும் ஒரு நாடு இந்தக் குற்றச்சாட்டுகளை சுமத்துவது முற்றிலும் பகுத்தறிவற்ற செயல் ஆகும்.
பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்கு இந்தியாவில் உள்ள அதே உரிமைகள் இல்லை. இந்தியாவில் சிறுபான்மையினர் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒருவர் எப்படிச் சொல்ல முடியும்?.
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பாதிக்காது. இந்தியாவில் உள்ள முஸ்லீம்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இது உள்துறை அமைச்சகத்தால் பல முறை உறுதிபடுத்தப்பட்டு உள்ளது என கூறினார்.