< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் 8 பெண்களை பலாத்காரம் செய்தவருக்கு 156 ஆண்டுகள் சிறை..!!

கோப்புப்படம்

உலக செய்திகள்

அமெரிக்காவில் 8 பெண்களை பலாத்காரம் செய்தவருக்கு 156 ஆண்டுகள் சிறை..!!

தினத்தந்தி
|
19 April 2023 2:11 AM IST

அமெரிக்காவில் 8 பெண்களை பலாத்காரம் செய்தவருக்கு 156 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இண்டியானா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்தவர் டாரெல் குட்லோ. இவர் மீது 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் கொள்ளை மற்றும் வளர்ப்பு நாயை கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இவ்வாறு மொத்தம் 57 குற்ற வழக்குகள் இவர் மீது பதிவானது. இந்த வழக்குகள் இண்டியானா மாகாண கோர்ட்டில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்குகளின் விசாரணை கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. இதில் டாரெல் குட்லோ மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானது. இதனையடுத்து தற்போது இந்த வழக்குகளின் தீர்ப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது டாரெல் குட்லோவுக்கு 156½ ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்