< Back
உலக செய்திகள்
குழந்தை கடத்தலில் தொடர்பு என வதந்தி: அரசியல் ஆலோசகர் உயிரோடு எரித்துக்கொலை
உலக செய்திகள்

குழந்தை கடத்தலில் தொடர்பு என வதந்தி: அரசியல் ஆலோசகர் உயிரோடு எரித்துக்கொலை

தினத்தந்தி
|
15 Jun 2022 3:30 AM IST

குழந்தை கடத்தலில் தொடர்பு என பரவிய வதந்தியால், அரசியல் ஆலோசகர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டை சேர்ந்த அரசியல் ஆலோசகர் டேனியல் பிகாசோ. 31 வயதான இவர் அந்த நாட்டின் நாடாளுமன்ற சட்ட குழுவில் ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார்.

இந்த நிலையில் மெக்சிகோவின் மத்திய மாகாணமான பாபட்லசோல்கோ நகரில் குழந்தை ஒன்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டது. இந்த குழந்தை கடத்தலில் டேனியல் பிகாசோவுக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக உள்ளூர் 'வாட்ஸ்அப்' குழுவில் வதந்தி பரவியது.

இந்த சூழலில் டேனியல் பிகாசோ, பாபட்லசோல்கோ நகரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு சென்றார். அப்போது உள்ளூரை சேர்ந்த 200-க்கும் அதிகமானோர் டேனியல் பிகாசோவை சூழ்ந்து கொண்டு அவரை சரமாரியாக தாக்கினார்.

அப்போது அங்கு வந்த போலீசார் கும்பலிடம் இருந்து டேனியல் பிகாசோவை மீட்டு போலீஸ் ரோந்து வாகனத்தில் ஏற்ற முயன்றனர். ஆனால் அதையும் மீறி அந்த கும்பல் டேனியல் பிகாசோவை அருகில் இருந்து வயல் வெளிக்கு இழுத்து சென்று, அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

மேலும் செய்திகள்