< Back
உலக செய்திகள்
சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியில் அணை உடைந்தது - 5,700 பேர் இடமாற்றம்

Image Courtesy : AFP

உலக செய்திகள்

சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியில் அணை உடைந்தது - 5,700 பேர் இடமாற்றம்

தினத்தந்தி
|
6 July 2024 4:56 PM IST

சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

பீஜிங்,

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து அங்குள்ள மிலோ ஆற்றில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் ஆற்றங்கரையோரத்தில் உள்ள கிராமங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவின் 2-வது மிகப்பெரிய நன்னீர் ஏரியான டாங்டிங் ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சுமார் 5,700 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 2,300-க்கும் மேற்பட்ட மீட்புப் படை வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் சீனாவின் மற்றொரு மிகப்பெரிய ஏரியான போயாங் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்