< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
வங்கதேசத்தில் 'ஹமூன்' சூறாவளியால் கனமழை; 3 பேர் உயிரிழப்பு, 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
|26 Oct 2023 3:22 AM IST
வங்கதேசத்தில் ‘ஹமூன்’ சூறாவளியால் கடலோர பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
டாக்கா,
வங்கக்கடலில் உருவான 'ஹமூன்' சூறாவளி, நேற்றைய தினம் தென்கிழக்கு வங்கதேசத்தின் கடற்கரை பகுதியில் சுமார் 75 முதல் 85 கி.மீ. வேகத்தில் கரையை கடந்தது. இதனால் வங்கதேசத்தின் கடலோர பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததுடன், இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ரோஹிங்கியா அகதிகள் வசிக்கும் முகாமும் பலத்த சேதத்தை சந்தித்தது. சாலைகள் முடக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதோடு மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.