< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சைபர் தாக்குதலால் லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டு முடக்கம்
|24 July 2024 1:49 AM IST
சைபர் தாக்குதல் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டு மூடப்பட்டது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒருங்கிணைந்த கோர்ட்டு உள்ளது. இங்கு மொத்தம் 36 விசாரணை கோர்ட்டுகள் செயல்படுகின்றன. இந்த நிலையில் அங்குள்ள கம்ப்யூட்டர்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.
எனவே அங்குள்ள அனைத்து கம்ப்யூட்டர்களும் முடங்கின. இதனையடுத்து பொதுமக்களின் தரவு பாதுகாப்பு கருதி லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டு உடனடியாக மூடப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டின் மிகப்பெரிய விசாரணை கோர்ட்டில் சைபர் கிரைம் தாக்குதல் நடந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் கடந்த வாரம் உலகம் முழுவதும் நடைபெற்ற மைக்ரோசாப்ட் செயலிழப்புடன் இது தொடர்புடையது அல்ல என அதிகாரிகள் தெரிவித்தனர்.