< Back
உலக செய்திகள்
கியூபாவில் வினோத தேர்தல்! ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் இடையேயான திருமணத்தை சட்டப்பூர்வமாக்க வாக்கெடுப்பு!
உலக செய்திகள்

கியூபாவில் வினோத தேர்தல்! ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் இடையேயான திருமணத்தை சட்டப்பூர்வமாக்க வாக்கெடுப்பு!

தினத்தந்தி
|
26 Sept 2022 5:41 PM IST

பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தை அரசாங்கத்தின் மீதுள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் வாய்ப்பாக்கி கொள்ளலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஹவானா,

கியூபாவில் ஒரே பாலின திருமணம் மற்றும் தத்தெடுப்பு சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டுமா என்று அதை சட்டமாக்குவது குறித்து வாக்கெடுப்பு நடத்திட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று கியூபாவில் தேர்தல் நடந்தது. ஒரே பாலின திருமணம் குறித்த முக்கிய வாக்கெடுப்பில் கியூபா மக்கள் நேற்று வாக்களித்தனர்,

ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கனெல் மற்றும் அவரது மனைவி ஹவானா வாக்குச் சாவடியில் காலையில் சென்று வாக்களித்தனர். அதன்பின் பேசிய ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கனெல், அனைத்து மக்களுக்கும் உரிமைகள் மற்றும் உத்தரவாதங்களை வழங்குவது நவீன விதிமுறை இது என்று தெரிவித்தார்.

மேலும், இந்த புதிய குறியீட்டிற்கு ஆதரவாக அரசாங்கம் தீவிர ஊடக பிரச்சாரத்தை நடத்தியது.புதிய சட்டம் அமலாக்கப்பட்டால், வாடகை தாய் மூலம் கர்ப்பத்தை அனுமதிக்கும், ஒரே பாலினத்தவர்கள் திருமணம் மற்றும் தத்தெடுப்பு ஆகியன சட்டப்பூர்வமாக்கப்படும்.

திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவை விட இரண்டு நபர்களுக்கு(ஒரே பாலினத்தவர்கள் உட்பட) அவர்களுக்கு இடையேயான சங்கமம் என்று இச்சட்டம் சொல்கிறது.

புதிய சட்டத்தை ஏற்க 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் தேவை. அதிருப்தியாளர்கள், குறியீட்டை நிராகரிக்க வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்குமாறு குடிமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பல லத்தீன் அமெரிக்க நாடுகள் - அர்ஜென்டினா, பிரேசில், சிலி, கொலம்பியா, கோஸ்டாரிகா மற்றும் ஈக்வடார் மற்றும் சில மெக்சிகன் மாநிலங்கள் - இப்போது ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்கின்றன.

2019இல் இச்சட்டத்தை கியூபாவில் அங்கீகரிக்க, கிறிஸ்துவ தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், தற்போது வாக்கெடுப்பு நடத்தி இச்சட்டம் அமலாக்கப்படும் நடைமுறை நடைபெறுகிறது.

கியூபாவின் 8.4 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கச் சென்றிருந்தனர். இந்த தேர்தலில், மற்ற தேர்தல்களை போல அல்லாமல் வித்தியாசமாக நடைபெறுகிறது. மற்ற தேர்தல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அது வேறு, எந்த உற்சாகமும் தெரியவில்லை என்று பலரும் தெரிவித்தனர்.

16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று, அங்கு கேட்கப்பட்ட வினாக்களுக்கு வெறுமனே "ஆம்" அல்லது "இல்லை" என்று வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த சட்டம் குறித்து கியூபா முழுவதும் பல மாதங்களாக தீவிர விவாதத்திற்கு உட்பட்டதில் பல கியூபர்கள் இப்போது அத்தகைய யோசனைகளை ஆதரிப்பதாக என்று கூறுகிறார்கள்.

இந்த சட்டம் குறித்து அரசியல் விஞ்ஞானி ரபேல் ஹெர்னாண்டஸ் கூறுகையில், "இது 1959ம் ஆண்டு புரட்சிக்குப் பின்னர் அங்குள்ள "மிக முக்கியமான மனித உரிமைச் சட்டம்" என்றார்.

கியூபா இப்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அங்கு உணவு, எரிபொருள் மற்றும் மருந்து பற்றாக்குறை நிலவுகிறது.

பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசாங்கத்தின் மீதுள்ள பரந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் வாய்ப்பாக்கி கொள்ளலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். நாட்டில் பல முக்கிய பிரச்சினைகளை விட்டுவிட்டு இதுபோன்ற தேவையில்லாதவற்றுக்கு தேர்தல் நடத்துவதை பலரும் விமர்சித்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்