< Back
உலக செய்திகள்
இஸ்ரேலில் கொடூரம்... பாலஸ்தீனிய சிறை கைதிக்கு பாலியல் அடிமையாக தாரை வார்க்கப்பட்ட பெண் காவலர்
உலக செய்திகள்

இஸ்ரேலில் கொடூரம்... பாலஸ்தீனிய சிறை கைதிக்கு பாலியல் அடிமையாக தாரை வார்க்கப்பட்ட பெண் காவலர்

தினத்தந்தி
|
1 Aug 2022 12:48 PM IST

இஸ்ரேலில், அதிகாரிகள் உத்தரவின் பேரில் பெண் காவலரை பாலஸ்தீனிய சிறை கைதி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்த திடுக்கிடும் குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது.



ஜெருசலேம்,



இஸ்ரேல் நாட்டின் வடக்கே கில்போவா சிறைச்சாலையில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் தொடர்புடைய எண்ணற்ற பாலஸ்தீனிய கைதிகள் பிடிபட்டு, அடைக்கப்பட்டு உள்ளனர். இதனால், சிறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும்.

சிறைக்கு வெளியேயும், உள்ளேயும் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். எனினும், இந்த சிறையில் சில ஆண்டுகளுக்கு முன் பெண் காவலர்களை பாலியல் அடிமையாக கைதிகள் பயன்படுத்திய விவகாரம் வெடித்தது. ஆனால், பெரிய அளவில் அது கண்டு கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் பாலஸ்தீனிய கைதிகள் 6 பேர் தங்களது சிறை அறையில் இருந்து, திட்டமிட்டு சுரங்கம் அமைத்து தப்பி சென்றனர். அதன்பின்னரே சிறை நிர்வாகம் கவனம் செலுத்த தொடங்கியது.

கடந்த ஆண்டு இஸ்ரேல் ஊடகங்களில் தொடர்ச்சியாக, கில்போவா சிறையில் நடந்த பாலியல் கொடுமைகளை பற்றிய தகவல்கள வெளியிடப்பட்டன. அதில், சிறை கைதிகள் தாக்க கூடிய சூழலில், அதில் இருந்து தப்பிப்பதற்காக ஆண் கண்காணிப்பாளர்கள், பெண் காவலர்களை கைதிகளுக்கு பாலியல் அடிமையாக அனுப்பி வைத்த சம்பவங்கள் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தின.

இந்நிலையில், சிறை அதிகாரி நிசிம் பினிஷ் பதவியின்போது, சிறையில் பணியாற்றிய பெண் காவலர் ஒருவர், தனது உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில், பாதுகாப்பு தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்ட பாலஸ்தீனிய கைதி ஒருவரால் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சி தகவலை கடந்த வாரம் வெளியிட்டார்.

இதற்காக நிதி திரட்டும் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், என்னுடைய தளபதிகள், சக பணியாளர்கள், என்னை பாதுகாப்பவர்கள் என நான் நினைத்தவர்கள், என்னை அந்த பயங்கரவாதியிடம் ஒப்படைத்து விட்டனர் என வேதனையுடன் தெரிவித்து நிதியுதவி கேட்டு அலைந்துள்ளார்.

இந்த கொடூர சம்பவம் பற்றி இஸ்ரேல் பிரதமர் யாயிர் லபிட் கவனத்திற்கு சென்றுள்ளது. ஒரு ராணுவ வீரர் தனது பணியின்போது பயங்கரவாதியால் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது என்பது ஏற்க முடியாதது என கூறிய யாயிர், விசாரணை நடத்தப்படும் என உறுதி கூறியுள்ளார்.

அந்த பெண் காவலரின் வழக்கறிஞரான கெரன் பராக் இந்த செயலை உறுதி செய்துள்ளார். தனது கட்சிக்காரருக்கு மனநல ஆதரவு தேவை என அவர் கோரியுள்ளார்.

மேலும் செய்திகள்