< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ரஷியாவை சமாளிக்க நீண்ட தூர ஏவுகணைகள் அதிகளவில் தேவை - உக்ரைன் பிரதமர்
|20 Feb 2024 10:30 PM IST
ரஷியாவை சமாளிக்க, அமெரிக்காவின் புதிய ராணுவ உதவிகளை உக்ரைன் எதிர்பார்க்கிறது என்று உக்ரைன் பிரதமர் கூறினார்.
டோக்கியோ,
உக்ரைன்-ரஷியா போர் கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. அவற்றின் உதவியால் போரில் உக்ரைன் தாக்குப்பிடித்து நிற்கிறது. இந்தநிலையில் போரால் உருக்குலைந்துள்ள உக்ரைனை மறுசீரமைப்பது தொடர்பான மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது.
இதில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், `ரஷியாவுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகள் அதிகளவில் தேவைப்படுகிறது. அதேசமயம் ஆயுத ஏற்றுமதி கொள்கையில் ஜப்பானின் கட்டுப்பாடுகளை உக்ரைன் புரிந்து கொள்கிறது. எனவே அமெரிக்காவின் புதிய ராணுவ உதவிகளை உக்ரைன் எதிர்பார்க்கிறது' என அவர் தெரிவித்தார்.