< Back
உலக செய்திகள்
பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா - முககவசம் அணிய மக்களுக்கு அறிவுறுத்தல்

Image Courtesy : AFP

உலக செய்திகள்

பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா - முககவசம் அணிய மக்களுக்கு அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
4 July 2022 1:32 AM IST

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முக கவசங்களை பயன்படுத்தும்படி மக்களை பிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது.

பாரீஸ்,

ஐரோப்பா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த நாட்டு அரசு தரவுகளின்படி ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1,000 நோயாளிகள் கொரோனா தொற்றுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர்.

சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் சுற்றுலா மீண்டும் வளர்ந்து வரும் நிலையில் அங்கு தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியிருப்பது அந்த நாட்டு அரசை கவலையடைய செய்துள்ளது. எனினும் சுற்றுலா பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் எதையும் அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசு கொண்டுவரவில்லை. அதேவேளையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு முக கவசங்களை பயன்படுத்தும்படி மக்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்