< Back
உலக செய்திகள்
சீனாவில் ஒரே நாளில் 34 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
உலக செய்திகள்

சீனாவில் ஒரே நாளில் 34 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினத்தந்தி
|
2 Dec 2022 4:05 PM GMT

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்,

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.

இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அங்கு 36,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 34,980 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 35,800 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், 4,233 பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறி இருப்பதாகவும் சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,233 ஆக உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,27,964 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்