< Back
உலக செய்திகள்
முகமது நபி குறித்து சர்ச்சை கருத்து விவகாரம் - ஈரான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை
உலக செய்திகள்

முகமது நபி குறித்து சர்ச்சை கருத்து விவகாரம் - ஈரான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை

தினத்தந்தி
|
9 Jun 2022 2:39 PM IST

நுபுர் ஷர்மா, விவகாரத்தில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கை திருப்தி அளிப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான்,

முகமது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர்களின் சர்ச்சைக்குரிய கருத்து, அரபு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சைக்கு மத்தியில், இந்தியா வந்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுதொடர்பாக, ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முகமது நபி குறித்து பாஜக செய்தி தொடர்பாளரின் கருத்து குறித்து இந்தியாவிடம் ஈரான் கவலை தெரிவித்த‌தாகவும், அப்போது இந்திய தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் திருப்தி அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்