< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை அமைக்கும் பணி ஆஸ்திரேலியாவில் தொடக்கம்!
|6 Dec 2022 2:17 PM IST
ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
சிட்னி,
ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை அமைக்கும் கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது.கிறிஸ்துமஸ் மரம் போன்று 1 லட்சத்து 31 ஆயிரம் ஆண்டனாக்கள் தொகுப்பாக இணைக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவின் சர்வதேச தளங்கள் இணைந்து 16 நாடுகளின் ஒத்துழைப்போடு இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.இதன்மூலம் அடுத்த 50 ஆண்டுகளில் விண்வெளியில் இருந்து புதிய தகவல்கள் கண்டுபிடிப்புகளை வெளியுலகிற்கு கொண்டுவர முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.