< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
கியூபாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதி!
|22 Aug 2022 3:09 PM IST
இத்தாலியில் இருந்து கியூபா வந்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
கியூபா
கியூபாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தாலியில் இருந்து கியூபா வந்த சுற்றுலாப்பயணிக்கு தொற்று கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடலில் புண்கள் ஏற்பட்டு, மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை அந்த நபர் நகரின் பல பகுதிகளுக்கும் சென்று வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.