< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து - 9 பேர் பலி
|1 Dec 2022 1:37 AM IST
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்தில் 9 பேர் பலியாகினர்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணம் ஒரக்சாய் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சுரங்க இடிபாடுகளில் இருந்து 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கனிம வளத்துறை அதிகாரிகள் கொண்ட குழு, சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். எரிவாயு தீப்பற்றியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.