< Back
உலக செய்திகள்
மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபராக ஷீன்பாம் பதவியேற்பு
உலக செய்திகள்

மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபராக ஷீன்பாம் பதவியேற்பு

தினத்தந்தி
|
3 Oct 2024 6:02 AM IST

2018-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல் பெண் மேயர் என்ற பெருமையையும் ஷீன்பாம் பெற்றிருந்தார்.

மெக்சிகோ சிட்டி,

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிபர் தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அதில் மெக்சிகோவின் ஆளுங்கட்சியான மொரேனா கட்சி (இடதுசாரி) சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட கிளாடியா ஷீன்பாம், ஏறக்குறைய 60 சதவீத வாக்குகளைப் பெற்று, அசைக்க முடியாத முன்னிலையுடன் வெற்றி பெற்றார்.

இந்தநிலையில் 3 மாதங்களுக்கு பிறகு நடந்த பதவியேற்பு விழாவில் மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் பதவியேற்றுக்கொண்டார்.

பதவியேற்பு விழாவில் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலக அளவில் புகழ் பெற்ற காலநிலை ஆராய்ச்சியாளரான ஷீன்பாம், 2007-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவராவார். 2018-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மெக்சிகோ நகரின் முதல் பெண் மேயர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2006 வரை நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இவா் பொறுப்பு வகித்துள்ளாா்.

மேலும் செய்திகள்