< Back
உலக செய்திகள்
ரஷியாவில் கனமழை: 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்

image courtesy: AFP

உலக செய்திகள்

ரஷியாவில் கனமழை: 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்

தினத்தந்தி
|
9 April 2024 5:23 AM IST

ரஷியாவில் வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாஸ்கோ,

ரஷியாவின் சைபீரியா பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக ஓர்க்ஸ் நகரில் உள்ள ஒரு அணை உடைந்து தண்ணீர் வெளியேறியது. எனவே அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்