< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை: தூதர்கள், ராணுவ அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த ரிஷி சுனக்
|25 Dec 2022 4:21 AM IST
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தூதர்கள், ராணுவ அதிகாரிகளுக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நன்றி தெரிவித்தார்.
லண்டன்,
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இங்கிலாந்துக்கான தூதர்கள், மூத்த ராணுவ அதிகாரிகள், தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் பிற பொதுப்பணியாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த அசாதாரண ஆண்டில் அவர்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்புக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்து அவர்களை ஆச்சரியப்படுத்தினார்.
மேலும் அவர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் குறித்த திட்டங்களையும் கேட்டு கலகலப்பாக உரையாடினார். இந்த தகவலை இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.