சீனாவில் சிறுவனை விஷம் வைத்து கொன்ற ஆசிரியருக்கு தூக்குத்தண்டனை
|சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பீஜிங்,
சீனாவின் ஹெனான் மாகாணம் ஜியான்சுவோ நகரில் உள்ள மழலையர் பள்ளியில் வான் யுன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்தார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு தன்னிடம் பயின்ற 25 மாணவர்களுக்கு விஷத்தன்மை வாய்ந்த சோடியம் நைட்ரைட் கலந்த உணவை கொடுத்துள்ளார்.
இதில் அந்த சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் வான் யுன்னை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கில் அந்த நாட்டின் கோர்ட்டு அவருக்கு 9 மாதம் சிறை தண்டனை வழங்கியது.
இந்தநிலையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு சிறுவன் சுமார் 10 மாதம் கழித்து உயிரிழந்தான். மேலும் வான் யுன் தனது கணவரையும் விஷம் வைத்து கொன்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.