< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
தைவானுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் - அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
|9 May 2023 1:18 AM IST
தைவானுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பீஜிங்,
தைவானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கிடையே தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. அதன் ஒருபகுதியாக சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து தைவான் வான் எல்லைக்குள் சீனா தனது போர் விமானங்களை பறக்க விட்டு அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் சீன வெளியுறவு மந்திரி குயின் கேங் அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தைவானில் பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்துமாறு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும் சீனாவின் பாதுகாப்பு, இறையாண்மை போன்றவற்றின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.