< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
தைவான் எல்லைக்குள் பறந்த சீன போர் விமானங்கள்
|23 July 2024 8:58 AM IST
சீனாவின் 15 விமானங்கள் எல்லையைத் தாண்டி தைவானுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
தைபே நகரம்,
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்தது. ஆனால் அதனை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா துடிக்கிறது. அதன்படி தைவான் எல்லையில் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி அவ்வப்போது சீனா பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால் சீனா தங்களை தாக்கினால் திருப்பி தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக தைவானும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தநிலையில் தைவானின் எல்லையில் சீனாவுக்குச் சொந்தமான 8 போர்க்கப்பல்கள் மற்றும் 22 விமானங்கள் கண்டறியப்பட்டன. இதில் 15 விமானங்கள் எல்லையைத் தாண்டி தைவானுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடல் மற்றும் வான் எல்லை பகுதியை உன்னித்து கவனித்து வருவதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.