< Back
உலக செய்திகள்
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: பொது வெளியில் தோன்றினார் ஜி ஜின்பிங்
உலக செய்திகள்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: பொது வெளியில் தோன்றினார் ஜி ஜின்பிங்

தினத்தந்தி
|
27 Sept 2022 6:00 PM IST

கடந்த 16 ஆம்தேதிக்கு பிறகு முதல் முறையாக ஜி ஜின்பிங் பொதுநிகழ்ச்சியில் தோன்றி, தன்னைப்பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பெய்ஜிங்,

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. சீனாவில் என்ன நடக்கிறது என்ற எந்த செய்தியும் தெளிவாக தெரியவராத நிலையில், அங்கு ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடப்பதாகவும் சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாகின.

இந்த யூகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் ஜி ஜின்பிங்கும் கடந்த சில நாட்களாக பொது வெளியில் தோன்றாமல் இருந்தார். இந்த நிலையில், கடந்த 16 ஆம்தேதிக்கு பிறகு முதல் முறையாக ஜி ஜின்பிங் பொதுநிகழ்ச்சியில் தோன்றி, தன்னைப்பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்