< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அண்டார்டிகாவில் ஆராய்ச்சி பணிகள்: நவீன மையத்தை நிறுவிய சீனா
|8 Feb 2024 1:23 AM IST
அண்டார்டிகாவில் சீனாவின் குயின்லிங் ஆராய்ச்சி நிலையம் செயல்படத் தொடங்கியது.
பீஜிங்,
பனிசூழ்ந்த தனி கண்டமாக விளங்கும் அண்டார்டிகாவில் ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ள உலகநாடுகள் போட்டிபோட்டு வருகின்றன.
இந்தநிலையில் அண்டார்டிகாவில் புதிய ஆராய்ச்சி மையத்தை சீனா நிறுவியுள்ளது. கிழக்கு அண்டார்டிகாவின் ராஸ் கடலோர பகுதியில் நாட்டின் 5-வது ஆராய்ச்சி மையத்தை சீனா கட்டி முடித்துள்ளது. செயற்கைகோள் நிலையம், கண்காணிப்பகம் ஆகிய நவீன வசதிகளை இந்த புதிய ஆராய்ச்சி மையம் கொண்டுள்ளது.
'குயின்லிங்' என பெயரிடப்பட்டுள்ள இந்த நிலையம் தன்னுடைய ஆராய்ச்சி பணியை தொடங்க உள்ள நிலையில் சீன அதிபர் ஜின்பிங் வாழ்த்து தெரிவித்து பாராட்டி உள்ளார்.
'மனித குலத்தின் நலனுக்காகவும், பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும் அண்டார்டிகாவில் கட்டப்பட்டுள்ள புதிய ஆராய்ச்சி நிலையம் துணைபுரியும்" என ஜின்பிங் தெரிவித்துள்ளார்.