< Back
உலக செய்திகள்
சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு மக்கள் தொகை சரிவு

கோப்புப்படம் 

உலக செய்திகள்

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு மக்கள் தொகை சரிவு

தினத்தந்தி
|
17 Jan 2023 11:28 PM IST

சீனாவில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகால இடைவெளியில் முதன்முறையாக பிறப்பு விகிதம் சரிந்துள்ளது

ஷாங்காய்,

உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடான சீனாவில் 141 கோடி பேர் வசிக்கின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 'சீனாவின் மக்கள்தொகை கடந்தாண்டு 141.26 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது 8,50,000 பேர் குறைந்து 141.18 கோடியாக உள்ளது.

குழந்தை பிறப்புகளை காட்டிலும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சீனப் பெண்கள் கடந்த ஆண்டு 9.56 மில்லியன் குழந்தைகளைப் பெற்றனர்; அதே 2021ம் ஆண்டில் 10.62 மில்லியன் குழந்தைகள் பெற்றனர். தேசிய பிறப்பு விகிதம் 2022ல் 7.52 என்ற நிலையில் (1,000 பேருக்கு) இருந்து 6.77 ஆக குறைந்துள்ளது. கடந்த 1961ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதுவரை இல்லாத வகையில் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகால இடைவெளியில் முதன்முறையாக பிறப்பு விகிதம் சரிந்துள்ளது' என்று தெரிவித்துள்ளது. கடந்த 1960ம் ஆண்டுகளின் முற்பகுதியில் சீனாவில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் அதனால் ஏற்பட்ட மரணங்களால் மக்கள் தொகை சரிவை கண்டது. தற்போது கொரோனா மரணங்கள் உள்ளிட்ட காரணங்களால் பிறப்பு விகிதத்தை காட்டிலும் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்