< Back
உலக செய்திகள்
போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சீன பயணிகள் விமானம்...!
உலக செய்திகள்

போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சீன பயணிகள் விமானம்...!

தினத்தந்தி
|
28 May 2023 5:08 PM IST

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சீன பயணிகள் விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

பிஜீங்,

போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய 2 நிறுவனங்களும் பயணிகள் விமான தயாரிப்பில் முன்னிலையில் உள்ளன. உலகில் செயல்பாட்டில் உள்ள பயணிகள் விமானங்கள் பெரும்பாலும் இந்த இரு நிறுவனங்களின் தயாரிப்பே ஆகும்.

இந்நிலையில், போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக சீனா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானத்தை களமிறக்கியுள்ளது.

சி919 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பயணிகள் விமானம் இன்று வெற்றிகரமாக முதல் பயணத்தை மேற்கொண்டுள்ளது. 164 இருக்கைகளை கொண்ட இந்த விமானம் இன்று ஷாங்காயில் இருந்து 128 பயணிகளுடன் புறப்பட்டு பிஜீங் நகரில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக முதல் பயணத்தை மேற்கொண்ட சீன சி919 விமானம் போயிங், ஏர்பஸ் விமான தயாரிப்புகளுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்