< Back
உலக செய்திகள்
வணிக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய சீனா

கோப்புப்படம்

உலக செய்திகள்

வணிக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய சீனா

தினத்தந்தி
|
23 July 2023 7:04 PM GMT

வணிக செயற்கைக்கோள்களை சீனா விண்ணில் செலுத்தியது.

பீஜிங்,

விண்வெளியில் செயற்கைக்கோள்களை செலுத்துவதில் உலக நாடுகள் போட்டிபோட்டு வருகின்றன. இதில் அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளின் வரிசையில் சீனாவும் முன்னிலை வகிக்கிறது.

இந்தநிலையில் அங்குள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து சீனா வணிக ரீதியிலான 2 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. க்யான்குன்-1 மற்றும் ஜிங்ஷிடாய்-16 என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள் செரெஸ்-1 வகை ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டன.

சிறிய ரக செயற்கைக்கோள்களை அனுப்ப பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட்டின் 6-வது பயணம் இதுவாகும். இந்த செயற்கைக்கோள்கள் தற்போது சரியான சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்