< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சீரியஸ்-1 ராக்கெட் மூலம் 7 வணிக செயற்கைக்கோள்களை அனுப்பிய சீனா
|11 Aug 2023 12:53 AM IST
சீரியஸ்-1 ராக்கெட் மூலம் 7 வணிக செயற்கைக்கோள்களை சீனா விண்ணுக்கு அனுப்பியது.
பீஜிங்,
சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் பல்வேறு செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது சீனாவின் ஜியுகுவாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து சீரியஸ்-1 என்ற ராக்கெட் ஏவப்பட்டது.
இந்த ராக்கெட்டில் ஜியுகுவாங்-1 உள்பட வணிக ரீதியிலான 7 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இவை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டு இருப்பதாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.