< Back
உலக செய்திகள்
3 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவில் மீண்டும் பாஸ்போர்ட்

கோப்புப்படம்

உலக செய்திகள்

3 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவில் மீண்டும் பாஸ்போர்ட்

தினத்தந்தி
|
29 Dec 2022 4:46 AM IST

3 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவில் மீண்டும் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.

பீஜிங்,

சீனாவில் 'ஜீரோ கோவிட் பாலிசி' என்ற பெயரில் உள்நாட்டு மக்களுக்கு பிறப்பிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டன. சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகளும் வரும் 8-ந் தேதி முதல் தளர்த்தப்படுகின்றன.

அங்கு கொரோனா பெருந்தொற்றால் கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கம் முதல் பாஸ்போர்ட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது.

தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் பாஸ்போர்ட்டுகள் வழங்கும் பணி வரும் ஜனவரி மாதம் 8-ந் தேதி தொடங்க உள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக சீன நாட்டினர் ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளாக செல்கிற வாய்ப்பு அதிகரிக்கிறது. அதே நேரத்தில் அவர்கள் சீனாவில் இருந்து பிற நாடுகளில் கொரோனாவை பரப்பும் ஆபத்தும் உள்ளது.

மேலும் செய்திகள்