< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சீனாவில் 324 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் இயக்கம்
|21 April 2024 6:00 AM IST
324 பெட்டிகளைக் கொண்ட இந்த ரெயில் சுமார் 4 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
பீஜிங்,
சீனாவின் மிகப்பெரிய சரக்கு ரெயில் ஷூஜோ-ஹுவாங்குவா வழித்தடத்தில் சோதனை ஓட்டமாக நேற்று இயக்கப்பட்டது. 324 பெட்டிகளைக் கொண்ட இந்த ரெயில் சுமார் 4 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 30 ஆயிரம் டன் பொருட்கள் வரை சுமந்து செல்ல முடியும். இதற்காக அந்த ரெயிலில் 4 மின்சார என்ஜின்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த ரெயிலானது ஷாங்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி தளத்தையும், ஹெபே மாகாணத்தில் உள்ள ஹுவாங்குவா துறைமுகத்தையும் நேரடியாக இணைக்கிறது. இதனால் நாட்டின் வர்த்தகத்தில் இது முக்கிய பங்கு வகிக்கும் என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.