< Back
உலக செய்திகள்
தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த சீனாவின்  30 போர் விமானங்கள்

@MoNDefense

உலக செய்திகள்

தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த சீனாவின் 30 போர் விமானங்கள்

தினத்தந்தி
|
31 May 2022 2:07 PM IST

தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த சீனாவின் 30 போர் விமானங்கள்

லண்டன்

அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக தைவான் சுட்டி காட்டியதால், இந்த ஆண்டு தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் சீனா தனது இரண்டாவது பெரிய ஊடுருவலை செய்துள்ளது.

தைவான் தனது வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் தென்மேற்கு பகுதிக்குள் சீனா அனுப்பிய 30 போர் விமானங்களை எச்சரித்துத் தடுப்பதற்காக தனது போர் விமானங்களை நிறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய வரைபடத்தின்படி, தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தின் ஒரு பகுதியான பிரதாஸ் தீவுகளின் வட கிழக்கே ஒரு பகுதியில் சீன விமானம் பறந்தது.

சமீபத்திய ஊடுருவலில் 22 போர் விமானங்கள், மின்னணு போர்முறைக்கான கருவிகள், நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள் ஆகியவை பங்கேற்றன என்று தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தைவான் மீது சீனா படையெடுக்கக் கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீனாவை எச்சரித்த சில நாட்களுக்குப் பிறகு இது நடந்துள்ளது. அதே நாளில் அமெரிக்க அதிகாரி ஒருவர் தைவான் தலைவர்களுடன் பாதுகாப்பு குறித்துக் கலந்தாலோசிக்க அந்நாட்டிற்கு சென்று உள்ளார்.

சீனாவும் தைவானும் 1940-களில் உள்நாட்டுப் போரின் போது பிளவுபட்டன. ஆனால், சீனா ஒரு கட்டத்தில் அது மீண்டும் தன்னோடு இணைக்கப்படும் என்று கூறியது. அதைத் தேவைப்பட்டால் பலவந்தமாகக் கூடச் செய்வதாகவும் கூறியது.


மேலும் செய்திகள்