< Back
உலக செய்திகள்
அதிகரித்து வரும் ரஷியா-சீனா ராணுவ ஒத்துழைப்பு - ஜப்பான் சரமாரி குற்றச்சாட்டு

கோப்புப்படம்

உலக செய்திகள்

அதிகரித்து வரும் ரஷியா-சீனா ராணுவ ஒத்துழைப்பு - ஜப்பான் சரமாரி குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
15 May 2023 2:28 AM IST

ரஷியாவுடன் சீனா தனது ராணுவ ஒத்துழைப்பை அதிகரித்து வருவதாக ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது.

டோக்கியோ,

உக்ரைன்-ரஷியா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவாக இருந்து வருகின்றன. அதேபோல் ரஷியாவுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடான சீனா இருந்து வருகிறது. ஒரு ஆண்டுகளை தாண்டி நடந்து வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் பலவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதன்படி ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வருவதாக சீனாவும் அறிவித்தது. ஆனால் இன்னும் போர் முடிந்தபாடில்லை.

இந்த நிலையில் ஸ்வீடனில் ஐரோப்பிய மற்றும் இந்தோ-பசிபிக் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜப்பான் வெளியுறவு மந்திரி யோஷிமாசா ஹயாஷி பேசும்போது, `உக்ரைன் மீதான ரஷியா போர் சர்வதேச ஒழுங்கின் அடித்தளத்தையே அசைத்து விட்டது. ஆனால் ரஷியாவுடன் சீனா தனது ராணுவ ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறது. இதன்மூலம் ஜப்பான் கடற்பகுதி அருகே கூட்டு போர்ப்பயிற்சி மற்றும் தைவானை சுற்றி அதன் ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது' என சீனா மீது அவர் சரமாரியாக குற்றம் சாட்டினார்.

மேலும் செய்திகள்