< Back
உலக செய்திகள்
அண்டை நாடுகளுடன் நீடிக்கும் பதற்றம்.. ராணுவ பட்ஜெட்டை 7.2 சதவீதம் உயர்த்தியது சீனா
உலக செய்திகள்

அண்டை நாடுகளுடன் நீடிக்கும் பதற்றம்.. ராணுவ பட்ஜெட்டை 7.2 சதவீதம் உயர்த்தியது சீனா

தினத்தந்தி
|
5 March 2024 4:09 PM IST

2024-ம் ஆண்டில் பாதுகாப்புக்காக 1.665 டிரில்லியன் யுவான் செலவு செய்யப்படும் என்று சீனாவின் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீஜிங்:

சீனாவில் தேசிய மக்கள் காங்கிரஸ் ஆண்டு கூட்டம் இன்று தொடங்கியது. துவக்க அமர்வில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ராணுவத்திற்கான பட்ஜெட் 7.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது, 2024-ம் ஆண்டில் பாதுகாப்புக்காக 1.665 டிரில்லியன் யுவான் (231.4 பில்லியன் டாலர்) செலவு செய்யப்படும் என்று பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய நெருக்கடி மற்றும் அண்டை நாடுகளுடனான பதற்றங்கள் நீடிக்கும் நிலையில் சீனா தனது ராணுவத்திற்கான செலவினங்களை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீன ராணுவமான மக்கள் விடுதலை ராணுவத்தில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை அமெரிக்க ராணுவத்தை விட அதிகமாக இருந்தபோதிலும், பட்ஜெட் ஒதுக்கீட்டில் அமெரிக்கா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. உலகின் இரண்டாவது பெரிய ராணுவ பட்ஜெட்டை சீனா கொண்டுள்ளது.

சீனாவில் அதன் நாடாளுமன்றம் தேசிய மக்கள் காங்கிரஸ்(என்.பி.சி.) என அழைக்கப்படுகிறது. அது ஆளும் அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் தெரிவிக்கும் பெயரளவுக்கான ரப்பர் ஸ்டாம்ப் நாடாளுமன்றமாகவே உள்ளது.

மேலும் செய்திகள்