< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சீனாவில் 66 ஆயிரம் போலி சமூக வலைதள கணக்குகள் முடக்கம்
|29 May 2023 3:11 AM IST
சீனாவில் 66 ஆயிரம் போலி சமூக வலைதள கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது.
பீஜிங்,
சீனாவில் சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகளை பரப்புதல், பணமோசடி உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் அரசாங்கத்துக்கு சென்றன. அதன் பேரில் கடந்த மார்ச் மாதம் முதல் சிறப்பு சோதனையை சீன அரசாங்கம் மேற்கொண்டது. இதில் சினா, வெய்போ, வீசாட் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி கணக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களில் தவறான பதிவுகளை பதிவிட்ட சுமார் 66 ஆயிரம் போலி சமூக வலைதள கணக்குகளை மூடி உள்ளதாக அந்த நாட்டின் இணையதள விவகார ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் டிக்-டாக் செயலியின் சீன பதிப்பான டூயினில் சுமார் 9 லட்சம் கணக்குகள் தவறான தகவல்களை பதிவிட்டதற்காக தண்டிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.