< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சீனா: குடையுடன் சென்ற நபர்களை தாக்கிய மின்னல்; வீடியோ வெளியீடு
|18 Jun 2024 12:40 AM IST
சீனாவில் மழை பெய்தபோது, குடை வைத்திருந்த நபர் மற்றும் அவருடன் நடந்து சென்றவர் என 2 பேரை மின்னல் கடுமையாக தாக்கியுள்ளது.
பீஜிங்,
சீனாவின் லையானிங் மாகாணத்தில் ரெயில் நிலையம் ஒன்றின் முன் 2 பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் கைகளில் குடையுடன் காணப்பட்டனர். அவர்கள் சென்றபோது, அந்த பகுதியில் நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. அவர்களுடன் வேறு சிலரும் நடந்து சென்றனர்.
அப்போது, திடீரென மின்னல் தாக்கியுள்ளது. இதில், குடை வைத்திருந்த நபர் மற்றும் அவருடன் நடந்து சென்ற நபர் என 2 பேரையும் மின்னல் கடுமையாக தாக்கியது. இதுபற்றிய வீடியோ காட்சிகளும் வெளிவந்துள்ளன.
இந்த சம்பவத்தில் அவர்கள் இருவரும் காயங்களுடன் அந்த இடத்திலேயே விழுந்தனர். எனினும், அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக உதவிக்கு ஓடி வந்தனர். இதன்பின்பு, அவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.