< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது சீனா..!!
|18 Sept 2023 1:06 AM IST
புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
பெய்ஜிங்,
வானில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் யோகன்-39 என்னும் தொலை உணர்வு செயற்கைக்கோளை ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று ஏவியது.
இந்த செயற்கைக்கோள் அதிநவீன புவி கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் என்றும், யோகன் (Yaogan) 39 லாங் மார்ச்-2D கேரியர் ராக்கெட் மூலம் 12:13 மணிக்கு (பெய்ஜிங் நேரம்) ஏவப்பட்டது மற்றும் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.