< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
லாங் மார்ச்-2சி ராக்கெட் மூலம் 9 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது, சீனா
|3 Jun 2022 1:12 AM IST
லாங் மார்ச்-2சி ராக்கெட் மூலம் 9 செயற்கைக்கோள்களை சீனா விண்ணில் செலுத்தியது.
பீஜிங்,
சீனா, நேற்று ஒரே நாளில் லாங் மார்ச்-2சி ராக்கெட் மூலம் 9 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. நண்பகல் 12 மணிக்கு, சிச்சுவான் மாகாணத்தின் ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள், வணிக செயற்கைக்கோள்கள் ஆகும்.
இந்த செயற்கைக்கோள்கள் தங்கள் சுற்றுப்பாதையில் இணைந்துள்ளன.
ஜீலி தொழில்நுட்பக் குழுமத்தின் துணை நிறுவனமான ஜீஸ்பேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த செயற்கைக்கோள்கள், ஆராய்ச்சிகள் செய்வதற்கும், தொழில்நுட்பங்களை சரிபார்ப்பதற்கும் முக்கியமாக பயன்படுத்தப்படும். கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தரவு ஆதரவுகளையும் வழங்கும்.
லாங் மார்ச் ராக்கெட் தொடரின் 422-வது பயணம் இதுவாகும்.