< Back
உலக செய்திகள்
பாகிஸ்தானில் இருந்து கழுதைகள், செல்லப்பிராணி நாய்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் சீனா
உலக செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து கழுதைகள், செல்லப்பிராணி நாய்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் சீனா

தினத்தந்தி
|
4 Oct 2022 2:18 PM GMT

கழுதைகள் மற்றும் செல்லப்பிராணி நாய்களை இறக்குமதி செய்ய சீனா ஆர்வம் காட்டுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்,

கனமழை மற்றும் வெள்ளத்தால் நிலைகுலைந்துள்ள பாகிஸ்தான் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. நிதி பற்றாக்குறையில் சிக்கித்தவித்து வரும் பாகிஸ்தான் வருமானத்தை உயர்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்ற கமிட்டிக்கு வர்த்தக அமைச்சகம் மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

அப்போது, பாகிஸ்தானில் இருந்து கழுதைகள் மற்றும் செல்லப்பிராணி நாய்களை இறக்குமதி செய்ய சீனா ஆர்வம் காட்டுவதாக நிலைக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

அப்போது, ஆப்கானிஸ்தானில் விலங்குகளின் (கழுதை, நாய்) விலை குறைவாக இருப்பதால் அங்கிருந்து இறக்குமதி செய்து பின்னர் அதை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யலாமா? என்று உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த நிலைக்குழு, விலங்குகளுக்கு தொற்று நோய் பரவுவதால் ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மருத்துவம் மற்றும் இறைச்சிக்காக பாகிஸ்தானில் இருந்து கழுதை மற்றும் செல்லப்பிராணி நாய்களை அதிக அளவில் சீனா இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்