< Back
உலக செய்திகள்
சீனா படையெடுத்தால் தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் - ஜோ பைடன் எச்சரிக்கை

கோப்புப்படம்

உலக செய்திகள்

சீனா படையெடுத்தால் தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் - ஜோ பைடன் எச்சரிக்கை

தினத்தந்தி
|
23 May 2022 1:02 PM IST

தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தைபே,

சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின்ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது.

அதுமட்டும் இன்றி தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்த நிலையில் தைவான் மீது சீனா படை எடுத்தால் தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தைவானை வலுக்கட்டாயமாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் சீன முயற்சிக்கு எதிராக அமெரிக்கா இராணுவ ரீதியில் தலையிடுமா என ஜோ பைடன்-யிடம் கேள்வி எழுப்பிய போது அவர், " அது தான் எங்களின் முடிவு" என அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் "சீனா ஆபத்துடன் விளையாடுகிறது. 'ஒன் சீனா' கொள்கையில் நாங்கள் உடன்பட்டு கையெழுத்திட்டோம். ஆனால் தைவான் படை எடுப்பால் கைப்பற்றப்படலாம் என்ற எண்ணம் பொருத்தமானதல்ல " என அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்