< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சீனாவில் கோடையில் கடும் வறட்சி: தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகக் கட்டுப்பாடு
|23 Aug 2022 6:25 AM IST
சீனாவில் கடும் வறட்சி காரணமாக தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகக் கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்,
சீனாவில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த கோடையில் கடும் வறட்சி நிலவுகிறது. இனால், நீா் நிலைகள வடு காணப்படுகின்றன. நீா் மின்சாரம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த ஏரிகளில் நீா்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, மின் உற்பத்தி குறைந்துள்ளது.
அதையடுத்து, மின்சாரத்தை சேமிக்கும் நடவடிக்கைகளில் சீன அரசு இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் மின்சாரத்தை ரேஷன் முறையில் பிரித்து வழங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுப்பாடு வரும் வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனா்.
இதற்கிடையே, பயிா்களைப் பாதுகாக்க செயற்கை மழையை உருவாக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.