< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
உள்ளாடைக்குள் 5 பாம்புகளை மறைத்து வைத்து கடத்த முயன்ற பெண்...!
|12 July 2023 5:01 PM IST
சீனாவிற்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான எல்லைக் கடக்கும் இடத்தில் சுங்க அதிகாரிகள் கடந்து செல்ல முயன்ற ஒரு பெண்ணை சோதனையிட்ட போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
பெய்ஜிங்
சீனாவிற்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான எல்லை குவாங்டாங் மாகாணம், புக்சியன் துறைமுகத்திற்கு ஹாங்காங் செல்ல ஒரு பெண் வந்தார்.
அந்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர் இந்த சோதனையின் போது அவரது மேல் உள்ளாடையில் மார்பகங்களுக்கு இடையே 5 பாம்பு குட்டிகளை வெவ்வேறு துணிப் பைகளில் கட்டி மறைத்து வைத்து அந்த பெண் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பெண்ணிடம் இருந்து பாம்புகள் மீட்கப்பட்டன. அந்த பெண் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
நூதனமாக, மேல் உள்ளாடைக்குள் பாம்புகளை மறைத்து வைத்து ஒரு பெண் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.