< Back
உலக செய்திகள்
உலகின் மிகப்பெரிய திசைமாற்று ரேடியோ தொலைநோக்கி - கட்டுமானத்தை தொடங்கியது சீனா
உலக செய்திகள்

உலகின் மிகப்பெரிய திசைமாற்று ரேடியோ தொலைநோக்கி - கட்டுமானத்தை தொடங்கியது சீனா

தினத்தந்தி
|
5 Oct 2022 5:18 PM GMT

இந்த தொலைநோக்கியின் மூலம் எந்த நேரத்திலும் வானத்தில் உள்ள 85 சதவீத நட்சத்திரங்களை கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

பெய்ஜிங்,

சீனாவின் ஷின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிரதேசத்தில் உள்ள கிடாய் மாவட்டத்தில் 110 மீட்டர் விட்டம் கொண்ட திசைமாற்று ரேடியோ தொலைநோக்கியின் கட்டுமானம் அண்மையில் தொடங்கியுள்ளது. இந்த திட்டப்பணி ஷின்ஜியாங் வானியல் ஆய்வு மையத்தின் தலைமையில் நடைபெறுகிறது.

இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பின்னர் உலகின் மிகப்பெரிய துல்லியமான கண்காணிப்பு மற்றும் முழு திசைமாற்றக் கூடிய ரேடியோ தொலைநோக்கியாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த தொலைநோக்கியின் மூலம் எந்த நேரத்திலும் வானத்தில் உள்ள 85 சதவீத நட்சத்திரங்களை கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த தொலைநோக்கி 150 மெகா ஹெர்ட்ஸ் முதல் 115 ஜிகா ஹெர்ட்ஸ் வரை இயங்கி கருந்துளைகள், வேகமான ரேடியோ அலைவரிசைகள், நானோ ஹெர்ட்ஸ் ஈர்ப்பு அலைகள் மற்றும் உயிரின் தோற்றம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளுக்கு பதிலளிக்கும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்