< Back
உலக செய்திகள்
பிலிப்பைன்ஸ் ராணுவ கப்பல்கள் மீது சீனா தாக்குதல்

கோப்பு படம்

உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் ராணுவ கப்பல்கள் மீது சீனா தாக்குதல்

தினத்தந்தி
|
23 Oct 2023 6:21 AM IST

தென்சீன கடல்பகுதியில் பிலிப்பைன்ஸ் ராணுவ கப்பல்கள் மீது சீனா தாக்குதல் நடத்தியது.

மணிலா,

பசிபிக் பெருங்கடலின் தென்சீன கடல் பகுதியானது உலகின் பரபரப்பான வர்த்தக பாதைகளுள் ஒன்று. இந்த பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடுகிறது. அதேசமயம் பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளும் இதற்கு உரிமை கோருகின்றன.

சர்ச்சைக்குரிய இந்த தென்சீன கடல் பகுதியில் சீனா-பிலிப்பைன்ஸ் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது. அதன்படி நேற்று அங்குள்ள தாமஸ் ஷோல் பகுதி அருகே பிலிப்பைன்ஸ் ராணுவ கப்பலும், அதனை நோக்கி கடற்படைக்கு சொந்தமான ஒரு வினியோக படகும் சென்று கொண்டிருந்தன. அப்போது தங்களது எல்லைக்குள் வந்ததாக கூறி சீன கடற்படை கப்பல்கள் அவற்றின் மீது மோதி தாக்கியது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பிலிப்பைன்ஸ் ராணுவம் கடும் கண்டனத்தை தெரிவித்தது.

மேலும் செய்திகள்