< Back
உலக செய்திகள்
கொரோனா கட்டுப்பாடுகளால் திரும்ப முடியாமல் தவித்த இந்திய மாணவர்களுக்கு விசா - சீன அரசு
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளால் திரும்ப முடியாமல் தவித்த இந்திய மாணவர்களுக்கு விசா - சீன அரசு

தினத்தந்தி
|
23 Aug 2022 12:07 AM IST

சீனாவில் படிப்பைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்களுக்கு மீண்டும் விசா வழங்க சீனா முடிவு செய்துள்ளது.

பீஜிங்,

சீனாவில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகள் பயிலும் சுமார் 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் கொரோனா முதல் அலை காலத்தில் தாய்நாடு திரும்பினர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, அவர்கள் தங்கள் படிப்பை தொடர சீனாவுக்கு திரும்பமுடியாமல் தவித்துவந்தனர்.

இந்நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு, சீனாவில் படிப்பைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்களுக்கு மீண்டும் விசா வழங்க சீனா முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பான விரிவான அறிவிப்பை டெல்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டிருக்கிறது. அதை சுட்டிக்காட்டி, இந்திய மாணவர்களை சீனாவுக்கு வரவேற்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய விவகாரங்கள் துறை ஆலோசகர் ஜி ரோங் டுவிட்டரில் நேற்று தகவல் வெளியிட்டுள்ளார்.

சீனாவில் ஏற்கனவே பயின்று பாதியில் திரும்பிய இந்திய மாணவர்களுக்கும், புதிய மாணவர்களுக்கும் மட்டுமின்றி, இந்திய தொழிலதிபர்களுக்கும், சீனாவில் பணிபுரிவோரின் குடும்பத்தினருக்கும் விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் செய்திகள்