< Back
உலக செய்திகள்
தைவான் அருகே சீனா போர் பயிற்சி: அமெரிக்காவுக்கு பதிலடி

கோப்புப்படம்

உலக செய்திகள்

தைவான் அருகே சீனா போர் பயிற்சி: அமெரிக்காவுக்கு பதிலடி

தினத்தந்தி
|
26 May 2022 3:29 AM IST

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவான் அருகே சீனா போர் பயிற்சியை தொடங்கி உள்ளது.

பீஜிங்,

தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அது மட்டும் இன்றி அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என சீனா மிரட்டி வருகிறது.

இந்த விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா, தைவானுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகிறது. இதை சீனா தொடர்ந்து கண்டித்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த இரு தினங்களுக்கு ஜப்பானில் நடைபெற்ற குவாட் மாநாட்டின் இடையே பத்திரிகையாளர்களிடம் தைவான் விவகாரம் குறித்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீனா, தைவான் மீது படையெடுத்தால் அதில் அமெரிக்க ராணுவம் தலையிட்டு தைவானை பாதுகாக்கும் என கூறினார்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தைவானுக்கு அருகே சீன ராணுவம் போர் பயிற்சியை தொடங்கியுள்ளது.

மேலும் செய்திகள்